நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலமாக பருப்பு , சீனி, கோதுமை மற்றும் இலவசமாக அரிசியும் வழங்கப்படுகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் உத்திரப்பிரதேசத்தில் இரண்டாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் இன்று லக்னோவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து அம்மாநிலத்தில் தற்போது நடைமுறையில் இருந்து இலவச ரேசன் திட்டம் மார்ச் மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது அது மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 கோடி மக்கள் பயனடைவார்கள் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.