Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. 300 யூனிட் இலவச மின்சாரம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பஞ்சாபை போலவே குஜராத்திலும் முன்னுரி யூனிட் இலவசம் மின்சாரம் வழங்கப்படும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். குஜராத் மாநில அகமதாபாத் நகரில் மக்களிடையே என்ற உரையாற்றிய ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாபில் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குஜராத்திலும் கூட மக்கள் இதனை பெற முடியும். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அடுத்த சந்திப்பின்போது இதற்கான தீர்வை நான் வழங்குவேன் என்று அவர் கூறியுள்ளார்

. பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. அங்கு முதல்வராக பதவி வகித்த பகவந்த், பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் திட்டத்தை அவர் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு பஞ்சாபில் ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.அதன்படி கடந்த ஜூலை 1ஆம் தேதியிலிருந்து பஞ்சாபில் இலவச மின்சார விநியோகத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து குஜராத் மாநிலத்திலும் நடைபெறும் தேர்தலில் அடுத்து வெற்றி பெற ஆம் ஆத்மி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் கெஜ்ரிவால், பஞ்சாபின் மக்கள் 300 யூனிட் மின்சாரம் பெறுவது போல குஜராத் மக்களுக்கும் இலவச மின்சாரம் கிடைப்பதற்கான தீர்வை வழங்குவேன் என்று உறுதி அளித்துள்ளார்.இது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |