தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு ஆம் ஆண்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன்படி பயணிகளின் வருகையை கட்டுப்படுத்த ரயில் போக்குவரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக பல்வேறு இடங்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அனைத்து துறைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதை அடுத்து ரயில் போக்குவரத்தின் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி திருச்சி – ஈரோடு – திருச்சி, திருச்சி – ஈரோடு – திருச்சி உள்ளிட்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை ஜூலை 9ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து திருச்செந்தூர் – திருநெல்வேலி – திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை, மதுரை – செங்கோட்டை – மதுரை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை, திருநெல்வேலி – செங்கோட்டை – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை, செங்கோட்டை – திருநெல்வேலி – செங்கோட்டை உள்ளிட்ட முன்பதிவில்லா ரயில் சேவையை வருகிற ஜூலை 1ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இதனை தொடர்ந்து கடப்பா – அரக்கோணம் , MEMU எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை, சேலம் – கரூர் – சேலம் உள்ளிட்ட சேவைகள் வருகின்ற ஜூலை 27ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.