Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. 4000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

தூத்துக்குடியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சித்த மருத்துவ பல்கலைகழகம், ஒமைக்ரான் தொற்று, சுகாதாரத் துறை காலிப் பணியிடங்கள் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அமைச்சர் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர்கள் உடன் இருந்தார்கள். அப்போது பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், தமிழ்நாடு பட்ஜெட்டில் கூறியவாறு சுகாதார துறையில் உள்ள 4000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை எம்ஆர்பி மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்காக செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என 7296 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர. அவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த உதயத்தில் ஊதியத்தை விட செவிலியர்களுக்கு 4000, சுகாதாரப் பணியாளர்கள் 3000 உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரை ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சென்னை அண்ணாநகரில் சித்த மருத்துவ பல்கலைக் கழக அலுவலக கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மதுரவாயல் அல்லது சிட்லபாக்கத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமையும். மேலும் தமிழகத்தில் 36 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. தற்போது புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரிகள் இல்லை. இந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென மத்திய அரசிடம் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒமைக்ரான் புதிய வகையான பிஏ செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் அருகில் ஒரு நபருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அவர் நலமுடன் உள்ளார். தமிழகத்தில் தினசரி தொற்று 50க்கு கீழ் தான் உள்ளது, கடந்த இரண்டரை மாதங்களில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |