அண்மை காலமாக meesho ஒரு சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளமாக விளங்குகிறது. பட்ஜெட் விலைக்குள் சிறந்த பொருட்கள் இத்தளத்தில் கிடைப்பதால் ஏராளமான மக்கள் மீஷோவிலேயே ஷாப்பிங் செய்ய துவங்கிவிடுகின்றனர். வாடிக்கையாளர்களை கவரும் அடிப்படையில் meesho ஷாப்பிங் தளம் அடிக்கடி பல்வேறு அதிரடி சலுகைகள், பரிசுகள், வினாடி வினா வாயிலாக பரிசுகள் வழங்குவது என பலவற்றை செய்துவருகிறது.
அதுமட்டுமின்றி இந்த நிறுவனம் அதன் ஊழியர்களுக்கும் சில நன்மைகளை வழங்கி வருகிறது. அதன்படி இப்போது இந்நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ரீசெட் மற்றும் ரீசார்ஜ் செய்துகொள்ள அக்டோபர் மாதம் இறுதியில் தொடர்ந்து 11 நாட்கள் விடுமுறை அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. meesho நிறுவனம் இதுபோல் தொடர் விடுமுறை அளிப்பது 2வது முறை ஆகும்.
இது தொடர்பாக நிறுவனம் அதன் வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது, பண்டிகைகால பரபரப்பான வேலைகளுக்கு பின் ஊழியர்கள் அவர்களது மன நிலையை சரிசெய்துகொள்ள அவர்களுக்கு சில நாட்கள் ஓய்வளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. இந்த 11 நாட்கள் விடுமுறையில் தீபாவளியும் வருவதால் ஊழியர்கள் அளவுகடந்த மகிழ்ச்சிஅடைவர். இதனிடையில் விடுமுறையில் எந்த வேலையையும் வீட்டிலிருந்தபடி செய்ய meesho கூறாதது, அதன் ஊழியர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.