தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் குஷ்பூ. இவர் அரசியல் பிரமுகர், எழுத்தாளர், தொகுப்பாளர் என்று பல முகங்களை கொண்டவர். இவர் பல வேலைகளில் பிஸியாக இருந்தாலும் தனது குடும்பத்தை கவனிப்பதிலும், குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிப்பதிலும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதில்லை எப்போதும் தவறுவதில்லை. நடிகை குஷ்பு சமீபத்தில் கடுமையாக வொர்க்கவுட் செய்து தனது எடையை குறைத்ததாகக் கூறினார். அதன் பிறகுதான் எடை குறைத்த போட்டோக்களை ஷேர் செய்தார். தற்போது மேலும் எடையை குறைத்து எலும்பும் தோலுமாய் மாறிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் “குஷ்பு என்றாலே குண்டாக இருந்தால் தான் அழகு இப்படி உங்கள் அழகை நீங்களே கெடுத்துக் விட்டீர்களே” என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் லண்டன் சென்றுள்ள குஷ்பு சில போட்டோக்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதில் அவர் கருப்பு நிற கவுன் அணிந்து, ஃப்ரீஹேர் விட்டு, ஹேண்ட்பேக் உடன் செம க்யூட்டாக உள்ளார. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் வொவ் என வாயை பிளந்தனர. அதுமட்டுமில்லாமல் ‘செம க்யூட்’ என்றும் ‘நம்ப முடியவில்லை’ என்றும் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். சிலர் ‘உங்க போட்டோ போடாம உங்க பொண்ணு போட்டோவை போட்டு இருக்கீங்க நீங்கள் லண்டன் போகலையா? என ஜொல்லு விட்டுள்ளனர். இந்த போட்டோவை பார்க்கும் போது பிரம்மா படத்தில் உங்களைப் பார்த்தது தான் நினைவுக்கு வருகிறது என்று தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். மேலும் குஷ்புவின் ‘இவள் ஒரு இளம் குருவி… எழுந்து ஆடும் மலர்கொடி’ என்ற பாடலை குறிப்பிட்டு வருகின்றனர்.