Categories
மாநில செய்திகள்

குஷ்புவின் ட்விட்டர் கணக்கு முடக்கம்….. டி.ஜி.பி அலுவலகத்தில் புகார்…..!!!!

பிரபல நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு, சமூக வலைதளமான ட்விட்டரில் ஆக்டிவாக இயங்கி வருபவர். ட்விட்டரில் குஷ்புவுக்கு சுமார் 1.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். இதற்கிடையே, தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்றில் குஷ்பு பேட்டி அளித்தார். மேலும், தான் சொன்னது உண்மை என்று காட்டும் வகையில், பத்திரிகை இணைப்பு ஒன்றையும் அவர் ட்வீட் செய்திருந்தார்.

ஆனால், அது அதிமுக ஆட்சியில் வீணடிக்கப்பட்டது என்றும் தற்போது 100 சதவீதத்திற்கும் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது என்றும் திமுகவினர் ஆதாரங்களுடன் பதிவிட்டனர். இதையடுத்து, நெட்டிசன்கள் பலரும் #LiarKushboo என்ற ஹேஷ்டேக்கில் தங்கள் எதிர்ப்பை குஷ்புவுக்கு எதிராக பதிவு செய்தனர்.

இந்த நிலையில், குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவருடைய ட்விட்டர் கணக்கில் வேறு ஒரு பெயருடன் படமும் மாற்றப்பட்டுள்ளது. அதில் இருந்த அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளது. இதை செய்தது ஒரு நபரா அல்லது குழுவா என்ற விவரங்கள் தெரியவில்லை, இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தனது ட்விட்டர் கணக்கு ஹேக்கிங் செய்யப்பட்டது குறித்து காவல்துறை டி.ஜி.பி அலுவலகத்தில் பாஜக உறுப்பினர் குஷ்பு புகார் தெரிவித்தார்.

Categories

Tech |