Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“குஷ்பு குடும்பத்திற்குள் வந்த புதிய உறுப்பினர்”…. இணையத்தில் வெளியிட்ட வீடியோ….!!!!!

நடிகை குஷ்பு தனது குடும்பத்திற்குள் புதிய உறுப்பினராக குட்டி பூனை ஒன்று சேர்ந்துள்ள வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் குஷ்பு. இவர் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், பாஜகவில் முக்கிய பொறுப்பு, சின்னத்திரை என அனைத்திலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். மேலும் இவர் இணையத்திலும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார். இந்த நிலையில் தனது குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவர் சேர்ந்துள்ள வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பிறந்த சில நாட்களே ஆன பூனைக்குட்டி ஒன்றிற்கு பில்லர் மூலம் பால் ஊட்டுகின்றனர்.

அதற்கு மாலதி சுந்தர் எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எங்கள் புதிய குடும்ப உறுப்பினர் #மாலதிசுந்தரை பாருங்கள்…. அவள் எனது மாடித் தோட்டத்தில் கைவிடப்பட்டு இருப்பதை பார்த்தேன். அவளுடைய தாய் அவளை விட்டுவிட்டு சகோதரனை மட்டும் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள். அந்த புவர் பேபியை உள்ளே கொண்டு வரவேண்டியிருந்தது. இப்போதைக்கு அவள் எங்கள் உடையவள். எனது இளைய மகள் அந்த பூனையுடன் மிகவும் நெருக்கமாகி விட்டார். மேலும் அந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.  அந்த பூனை குட்டி தங்களுடைய இதயத்தில் இடம்பிடித்து விட்டது என கூறியிருந்தார். வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.

Categories

Tech |