பாகிஸ்தானில் கூகுளில் அதிகமாக தேடப்பட்டவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது .
பாகிஸ்தானில் f16 விமானத்தைச் சுட்டு விழ்த்திய இந்திய விமானப் படையின் கமாண்டரான தமிழக வீரர் அபிநந்தன் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோர் பாகிஸ்தானில் அதிகமானோரால் கூகுளில் தேடப்படும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில்கூகுளில் அதிகமாக தேடப்படும் நபர்கள் குறித்த விவரம் வெளியானது.
இதில் அதிகமாக தேடப்பட்ட பிரபலங்கள் வரிசையில் வீரர் அபிநந்தன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். பெண்கள் வரிசையில் பாலிவுட் நடிகை சாரா அலி கான் மிகவும் தேடப்பட்ட பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறார்.
இந்தியாவில் குடியேறிவிட்ட பாகிஸ்தானின் பாடகரான அத்னன் சாமி அதிகம் தேடப்படும் நபர்களில் ஒருவராக இடம் பெற்றுள்ளார் .