உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் செயலியை பயன்படுத்தி வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பயனர்களுக்கு தேவையான மின்னஞ்சல் மற்றும் டிரான்ஸ்லேட்டர் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இங்கு உள்ளது. அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூகுள் நிறுவனம் அவ்வப்போது புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது.
இந்நிலையில் கூகுளில் தேவையான அனைத்தையும் தேட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தேடும் வசதியை கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். உரையுடன் குரல் மூலம் தேடுவதை சாத்தியமாக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். உலகில் பேசப்படும் ஆயிரம் மொழிகளை இணையத்தில் கொண்டு வர முயற்சி செய்கிறோம். மக்களுக்கு அவர்களின் மொழிகளில் தகவல்களை வழங்குவதே தங்களின் முக்கிய நோக்கம் என்ற சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.