கூகுள் குரோம் பிரவுசரில் பாதுகாப்பு ரீதியான பிரச்சனைகள் இருப்பதால், அதை பயன்படுத்துபவர்கள் மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கூகுள் குரோமில் பல்வேறு பாதிப்புகள் கண்டறியப்பட்டதாகவும், ரிமோட் அட்டாக் என்று அழைக்கப்படும் குறிப்பிட்ட கணினியை நோக்கமாகக் கொண்டு தாக்குதல் நடத்துபவர்களின் அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய வழி தாக்குதலால் தனிப்பட்ட தகவல்கள் எளிதில் அவர்களால் பெற முடியும் என்பதால், கூகுள் குரோமின் புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்த நிலையில் 22 வகையான பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு குரோம் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளதாக கூகுள் குரோம் அறிவித்துள்ளது.