கூகுள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் இது உண்மை என்று ஒரு சம்பவம் அம்பலமாகியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 500 பெண் ஊழியர்களுக்கு ஆண்களை விடக் குறைவான ஊதியம் வழங்கப் பட்டுள்ளது .
ஆண்களும் பெண்களும் ஒரே பதவியில் இருந்தாலும் கூட இந்த ஊதிய பாகுபாடு இருந்துள்ளது. இதுகுறித்து பெண் ஊழியர்கள் சிலர் நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் வேலையை விட்டுச் சென்ற முன்னாள் ஊழியர்கள் சிலர் 2017 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை 5 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊதிய பாகுபாடு காட்டப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் 108 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.