மொபைல் செயலிகள் (ஆப்ஸ்) அனைத்து பயனர்களையும் சென்றடைய கூகுள் பிளே ஸ்டோர் அத்தியாவசிய ஊடகமாக மாறிவிட்டது. ஆன்ட்ராய்டு மொபைல் போன்களுக்குரிய செயலிகளை உருவாக்கும் உற்பத்தியாளர்களின் முக்கியமான விநியோகஸ்தராக கூகுள் பிளே ஸ்டோர் இருக்கிறது. இது சந்தைக்கு வருகிற செயலிகளை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பிளே-ஸ்டோர் (ஆப்ஸ்) செயலிக்குரிய கொள்கைகளை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய வணிகப்போட்டி ஆணையம், கூகுள் நிறுவனத்துக்கு ரூபாய்.936.44 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தன் கொள்கை நடத்தைகளை மாற்றியமைக்குமாறும் கூகுள் நிறுவனத்திற்கு இந்திய வணிகப்போட்டி ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.