மருத்துவர் ஒருவர் தன்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு வித்தியாசமாக கட்டணங்களை வகுக்கும் வகையில் ஒட்டியுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கௌரவ் டால்மியா என்ற இந்த கட்டண முறை தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் மருத்துவர் ஒருவர், தன்னிடம் வரும் வெளி நோயாளிகளுக்கு மருத்துவ கட்டணத்தை அதில் பட்டியலிட்டுள்ளார்.
அதன்படி நான் நோயை கண்டறிந்து நான் சொல்லும் சிகிச்சை என்றால் 200 ரூபாய் கட்டணம், நான் நோயை கண்டறிந்து நீங்கள் சொல்லும் சிகிச்சை என்றால் 500 ரூபாய் கட்டணம், உங்கள் கூகுள் சந்தேகங்களுக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம், நீங்கள் நோயை கண்டறிந்து நான் சொல்லும் சிகிச்சை என்றால் 1500 ரூபாய் கட்டணம்,நீங்கள் நோயை கண்டறிந்து நீங்கள் சொல்லும் சிகிச்சை என்றால் 2000 ரூபாய் கட்டணம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
This doctor gets it totally right!!! pic.twitter.com/iW9Ou8UVwO
— Gaurav Dalmia (@gdalmiathinks) June 1, 2022