நாடாளுமன்ற நிலைக்குழு முன் கூகுள் பேஸ்புக் நிறுவன அதிகாரிகள் நாளை ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்பி சசி தரூரை தலைவராக கொண்டு இயங்கும் நாடாளுமன்ற நிலைக்குழு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது அதில் தெரிவித்துள்ளதாவது: “ஃபேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா நிறுவனங்கள் சமூக ஊடகங்களில் குடிமக்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாகவும், சமூக வலைதளங்களை, ஆன்லைன் செய்தி தளங்களை தவறாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்தும் தங்கள் கருத்தினை தெரிவிக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளது.
மேலும் பேஸ்புக் கூகுள் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆஜராகி இது தொடர்பான கருத்துக்களை முன்வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த ஜூன் 18-ஆம் தேதி நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக்குழு முன்பு ட்விட்டர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆஜராகி கருத்துக்களைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.