கூகுள் நிறுவனம் டெபிட் கார்டு சேவையை வாடிக்கையாளர்களுக்கு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் கிரெடிட் கார்டுகளின் வெற்றியை பார்த்தபிறகு கூகுள் நிறுவனம் டெபிட் கார்டு அறிமுகம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது. அதனால் அந்த கார்டுகளை வைத்து இணையத்திலும், சில்லறை கடைகளிலும் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகமான கேஷ்பேக் ஆஃபர் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சில வங்கிகளுடன் கூட்டாக இணைந்து டெபிட் கார்டை கூகுள் நிறுவனம் செய்ய உள்ளது. மேலும் ஆப்பிள் காடு போலவே கடைகளிலும் சைர் இணையத்திலும் சரி பயன்படுத்தக்கூடிய வகையில் தான் கூகுள் கார்டு வடிவமைக்கப்படுகிறது.
இதே டெபிட் கார்டின் மெய்நிகர் படிவத்தை பயனாளர்களின் மொபைல் மூலமாக ப்ளூடூத் முறையில் செலுத்தும் கட்டணங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். மற்ற காடுகளை போலவே இணையத்தில் மற்ற விஷயங்களைப் ஆகவும் பயன்படுத்தலாம். இந்த சேவைகள் விரைவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.