Google Pay மூலம் பண மோசடி செய்யப்பட்டதில் 24,00,000 ரூபாயை இழந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில். விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சில ரகசிய தகவலின் படி வடமாநில கும்பலை சேர்ந்த ரோகன், ராகேஷ் குமார் சிங், சுயந்தன் முகர்ஜி, ராகுல் ஆகிய 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவு போலீசார் மேற்கு வங்காளத்திலிருந்து கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், செல்போன் எண்களை மட்டும் வைத்து மற்றொரு சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அந்த எண்ணின் வங்கிக் கணக்கு மற்றும் Google Pay மூலம் பணம் கொள்ளையடித்தது முதற்கட்ட விசாரணையில் வந்ததாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.