நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்சிபிஐ) ரிசர்வ் வங்கியிடம் டிசம்பர் 31ஆம் தேதி முதல் மற்ற செயலிகள் வாயிலாக செய்யப்படும் பரிவர்தனைகளுக்கு வரம்பு விதிக்கப்பட கோரிக்கை விடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள்பே, போன்பே மற்றும் பேடியம் ஆகிய செயலிகளுக்கு இன்று வரை பரிவர்த்தனை செய்வதற்கான வரம்பு என்று எதுவுமில்லை. இப்போது வங்கி யூபிஐ செயலிகள் வாயிலாக செய்யப்படும் பரிவர்த்தனைக்கு வரம்பு நிர்ணயிப்பது பற்றி எந்த வித முடிவையும் எடுக்கவில்லை.
யூபிஐ பரிவர்த்தனைகளை கட்டுப்படுத்துவதற்குரிய காலக்கெடுவை என்பிசிஐ நீட்டிக்கவேண்டும் என சில நிறுவனங்கள் விரும்புகின்றனர். இப்போது இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் மார்க்கெட் கேப் அமலாக்கம் குறித்த பிரச்சினை சரிசெய்யப்பட்டு விடும் என சில தகவல்கள் தெரிவிக்கிறது. நவம்பர் மாத இறுதிக்குள் யூபிஐ பரிவர்த்தனை வரம்பை கட்டுப்படுத்தப்படுமா என்பது குறித்து சில தெளிவான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.