Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே, போன் பே, பே டிஎம் பயனர்களுக்கு அதிர்ச்சி…. இனி இதற்கும் கட்டணம்…. ரிசர்வ் வங்கி திட்டம்….!!!!

கூகுள் பே, போன் பே போன்ற ஆன்லைன் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது இந்தியாவில் தற்போது ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவரும் மிக இயல்பாக பயன்படுத்தக்கூடியதாக மாறி உள்ளது. மக்களின் அன்றாட பயன்பாடுகளில் ஒன்றாக மாறிப்போன, கூகுள் பே, பே டிஎம் போன்ற டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

அதாவது பெரிய முதலீடு மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு கட்டணங்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்னணு நிதி பரிமாற்றத்திற்கான உள்கட்டமைப்பிற்கான முதலீட்டை மீட்டெடுக்கும் நோக்கில் கட்டணம் விதிக்கப்பட உள்ளதாகவும், இதுதொடர்பாக மக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, பொதுமக்களின் தினசரி வாழ்வில் முக்கிய அங்கமாக மாறியுள்ள நிலையில், இந்த சேவைக்கு கட்டணம் வசூலிக்க ரிசர்வ் வங்கி கருத்து கேட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |