Categories
தேசிய செய்திகள்

கூகுள் பே மூலம் கிரெடிட் கார்டு பில்…. செலுத்துவது எப்படி?…. இதோ எளிய வழிமுறைகள்….!!!!

யுபிஐ பேமெண்ட் முறை வந்தவுடன் மக்கள் வங்கிக்கு போகும் வழிமுறை மிகவும் குறைந்து விட்டது. அனைத்து நடைமுறைகளையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்திக்கொள்ளும் அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. கூகுள்பே, போன்பே, பேடிஎம் ஆகிய யுபிஐ செயலிகள் வந்தபின் காய்கறி கடை முதல் கழிப்பறை வரை நொடியில் பணத்தை செலுத்திவிட முடிகிறது. இதையே மக்களும் அதிகம் விரும்புகின்றனர். அத்தகைய வசதிகள் உள்ள கூகுள்பே வாயிலாக உங்களின் கிரெடிட்கார்டு பில்லையும் எப்படி செலுத்துவது என்ற ஈஸியான வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

 கிரெடிட்கார்ட் பில்லை கூகுள் பே வாயிலாக செலுத்துதல்:

# கூகுள்பே-வுடன் கிரெடிட்டை இணைக்கவேண்டும்.

# பேமெண்ட் கேட்டகிரிக்கு சென்றதும் அங்கு கிரெடிட்கார்டு பில்பேமெண்ட் ஆப்சன் இருக்கும்.

# அங்கு உங்களது 16 இலக்க அட்டை எண்ணை பதிவிடவேண்டும்.

# சில நேரங்களில் உங்களது கிரெடிட்டின் இறுதி நான்கு இலக்கங்கள் ஆகிய வரையறுக்கப்பட்ட தகவலை மட்டுமே உள்ளிடவும்.

# உங்களது தகவலை மதிப்பாய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும்.

# தற்போது உங்களது கிரெடிட்கார்டு கூகுள் பே உடன் இணைக்கப்பட்டிருக்கும்.

# பின் உங்களது யுபிஐ பாஸ்வேர்டை போட்டு கிரெடிட்கார்டு பில்லை செலுத்தலாம்.

Categories

Tech |