Categories
பல்சுவை

கூகுள் பே மூலம் பணம் அனுப்பினால்… இனி கட்டணம் வசூல்….? வெளியான தகவல்…!!!

கூகுள் பே ஆப் மூலம் இனி பணம் அனுப்பினால் கட்டணம் வசூல் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதிலும் பணம் அனுப்புவது மற்றும் கட்டணம் செலுத்துவது போன்ற சேவைகளுக்கு அனைவரும் மொபைல் செயலிகளையே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கூகுள் பே செயலி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கூகுள் பே செயலி மூலமாக பணம் அனுப்பினால் இனி கட்டாயம் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் ஜனவரி மாதம் முதல் இணைய செயலி சேவை ரத்து செய்யப்படும் என்றும் மொபைல் ஆப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியது.

ஆனால் அந்த தகவலை கூகுள் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்தச் செய்தியை தாங்கள் வெளியிடவில்லை என்றும் இந்தியாவில் உள்ள பயனாளர்கள் யாருக்கும் கூகுள் பேமூலமாக பணம் அனுப்பினால் வழக்கம்போல கட்டணம் எதுவும் கிடையாது என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவில் இருக்கின்ற பயனாளர்களுக்கு மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்படும் என்றும் அது இந்தியாவின் தவறான தகவல் பரவியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் ஒரு செய்தியை வெளியிட்டது.

அதில், “புதிய வடிவில் கூகுள் பே அறிமுகம் செய்யப்படும். அந்த புதிய வடிவிலான செயலி முதல் கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும். அது பயன்பாட்டிற்கு வந்த பின்னர் கூகுள் பே வசதியை ஆன்லைன் தளத்தில் கட்டாயம் பயன்படுத்த முடியாது. அதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் தளங்களில் மட்டுமே பயன்படுத்த இயலும். அதனைப்போலவே உடனடி பண பரிவர்த்தனைகளுக்கு கட்டாயம் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த அறிவிப்பு அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டுமே எனவும் இந்தியாவில் கட்டணம் வசூல் செய்யக்கூடாது” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |