கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது .
கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கியிருக்கின்றது.இச்சிறப்பம்சம் ஆண்ட்ராய்ட் வெர்ஷனில் சிலருக்கு மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. ஆண்ட்ராய்ட் 11 லில் கூகுள் மேப்ஸ் வெர்ஷன் 10 .51.1 டார்க் மோட் வசதியை வழங்குகின்றது. இத்தகவலை பற்றி ரெடிட் தளத்தில் சில பயனர்கள் தெரிவித்துள்ளனர், இருப்பினும் இந்த அப்டேட் பயன்பெறும் சிலருக்கு டார்க் மோட் வசதி கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் புதிய டார்க் மோட் அம்சம் சர்வெர் சார்ந்த ரோல்- அவுட் முறையில் வழங்கப்பட இருக்கிறது . இந்த அம்சம் அனைவருக்கும் வரும் வாரங்களில் வழங்கப்பட்டுவிடும், ஆனால் துவக்கத்தில் இந்த அம்சம் ஏட்ஜ் டு ஏட்ஜ் யுஐ வசதியை கொண்டிருக்கவில்லை . செயலியின் கீழே கருப்புநிறத்தில் பார் ஒன்று தென்படுகிறது. கூகுள் மேப் செயலியில் அப்பிரியன்ஸ் டேபிலில் இந்த அம்சம் பட்டியலிடப்பட்டுள்ளது . பயனர்கள் டார்க் தீம், லைட் தீம் அல்லது சிஸ்டம் தீமுடன் சிங் செய்வது என 3 ஆப்ஷன்களில் ஒன்றை தேர்ந்தெடுத்துகொள்ளலாம் .