நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் விரிவாக்கப் பணி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் குழுவின் ட்விட்டர் போராட்டம் காலை 9 மணி முதல் தொடங்கியுள்ளது. #StopKudankulamExpansipon என்ற ஹாஸ்டேக் பயன்படுத்தி நடந்து வரும் இந்த போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் போன்ற கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Categories