Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூரிலிருந்து புறப்பட்ட பேருந்து மூன்று இடங்களில் பழுது”…. பேருந்தில் பயணித்தோர் அவதி….!!!!!

கூடலூரில் இருந்து தாளூருக்கு சென்ற அரசு பேருந்து இடையில் மூன்று இடங்களில் பழுதாகி நின்றதால் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவதிப்பட்டார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலான பேருந்துகள் காலாவதியாகி போதிய பராமரிப்பு இல்லாமலும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை கூடலூரில் இருந்து தாளூருக்கு காலை எட்டு மணி அளவில் அரசு பேருந்து புறப்பட்டு சென்ற நிலையில் இடையில் மூன்று முறை பழுதானது. ஒவ்வொரு முறையும் பழுது பார்க்கப்பட்டு சென்ற நிலையில் இறுதியாக பேருந்து இயக்க முடியவில்லை.

இதனால் பேருந்தில் பயணித்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் பேருந்து இயங்காததை தொடர்ந்து வேறு வாகனங்களில் சென்றார்கள். இது குறித்து அவர்கள் கூறியுள்ளதாவது, சம்பந்தப்பட்ட பஸ்ஸில் சென்சார் பிரச்சனை இருக்கின்றது. இதை பழுது பார்க்க கோவை அல்லது ஊட்டியில் போக்குவரத்து கழக பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றார்கள். இதனால் கூடலூர் பகுதியில் இயக்கப்படும் பஸ்களில் பராமரிப்பது இல்லை. ஆகையால் பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

 

 

Categories

Tech |