Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கூடலூர் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்ற ஓவிய நிகழ்ச்சி”… ஏராளமானோர் பங்கேற்பு…!!!

கூடலூர் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக உருவாக்க வரைபட நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை அருகிலிருக்கும் கூடலூர் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக தேர்வு செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் தூய்மை பாரத இந்திய இயக்கம் 2021-22 ஆம் ஆண்டிற்கான திரவ கழிவு மேலாண்மை குறித்து தமிழகம் கிராமத்தை நோக்கி திட்டத்தின் கீழ் கூடலூர் ஊராட்சியில் வரைபடம் வரையும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்றத்தலைவர் அடைக்கலம் தலைமை தாங்க ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வசந்தம் தங்கராசு, தோகைமலை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பானுமதி, மேற்பார்வையாளர் சரவணமுத்து, ஊராட்சி செயலாளர் நேசமணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒன்றிய ஆணையர் சரவணன் வரைபடங்களை பார்வையிட்ட பிறகு கூறியதாவது, “தனிநபர் கழிப்பறையிலிருந்து வரும் கழிவு நீரை உறிஞ்சி குழி மூலம் பயன்படுத்த வேண்டும். இந்த வரைபடத்தில் கோவில்கள், பள்ளிகள், ஊராட்சி மன்றம், இயற்கை சூழல் நிறைந்த பூங்கா முதலியவை இடம்பெற்றிருக்கின்றது. கூடலூர் ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக உருவாக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Categories

Tech |