தொடர் கனமழை காரணமாக கூடலூர் தோட்டமூலா இடையேயான பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில் முகாமில் 25 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் கனமழை பெய்து வருகின்ற நிலையில் நேற்ரிலிருந்து மலையின் தாக்கம் சற்று குறைந்திருக்கின்றது. மேலும் மாயார் ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் முதுமலை தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு வாகன போக்குவரத்து ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் கூடலூரில் இருந்து தோட்டமூலா செல்லும் சாலையில் உள்ள பாலம் உடைந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் சுற்று வட்டார மக்கள் அத்தியாவசிய சேவைகளுக்கு வெளியே சென்றுவர முடியாத நிலை காணப்படுகின்றது. மேலும் கிராமத்துக்குள் வெள்ளம் போகும் அபாயமும் இருக்கின்றது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 குடும்பத்தைச் சேர்ந்த 25 பேரை மீட்டு தொரப்பள்ளி அரசு உண்டு உறைவிட பள்ளியில் தங்க வைத்துள்ளனர் வருவாய்த்துறையினர்.