தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியை தொடர்ந்து கௌதமேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவாகியுள்ள 3-வது படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த, ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது ஒரு தகவலை கூறியுள்ளார். அதாவது ரசிகர்களை சந்தித்து பேசி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது எனவும், பத்து தல திரைப்படத்திற்கு முன்பாக ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.