தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி கூடிய விரைவில் இந்தியாவிற்கு மோடி என்று பெயர் சூட்டப்படும் என விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 294 பேரவை தொகுதிகளில் உள்ளது. இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆட்சியிலிருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் எப்படியாவது இந்த முறையும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று நடந்த பேரணியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், மம்தாவுக்கு பாஜகவுக்கும் இடையே ஏற்படும் போர் என்பதை மக்கள் மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர்கள் பொய் வதந்திகளை பரப்புகின்றனர் என்று கூறினார். இந்த நாட்டுக்கு மோடி என பெயர் சூட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்துக்கு மோடியின் பெயர் சூட்டப்பட்டது. தடுப்பூசி சான்றிதழுக்கு மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. இதேபோல் நமது நாட்டிற்கும் கூடிய விரைவில் மோடியின் பெயர் வைக்கப்படலாம் என்று தெரிவித்தார்.