Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“கூடிய விரைவில் டும்டும்டும்”…. குட் நியூஸ் சொல்லவிருக்கும் நயன்-விக்கி…!!!!

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் திருமண தேதியை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வருகிறார்கள். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நயன்தாரா தற்போது பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கின்றார். இவர் தற்போது அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து நடித்து வருகின்றார். நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள்.

நயன்தாரா அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருவதால் திருமணத்தை தள்ளிப் போடுவதாக கூறுகிறார்கள். விக்னேஷ் சிவனும் தற்போது ஏகே 62 திரைப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குள் ஆரம்பமாகும் என கூறப்படுகின்றது. இதனால் அதற்குள் திருமணத்தை முடிக்க வேண்டும் என முடிவு செய்து இருக்கின்றார்கள். இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு வருவதால் விரைவில் திருமணத்தை முடிக்க வேண்டும் என குடும்பத்தார்கள் விரும்புவதாகவும் செய்தி பரவி வருகின்றது. இதனால் வருகின்ற ஜூன் மாதம் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. திருமணத் தேதியை நயனும்-விக்கியும் கூடிய விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |