ஓ.பி.எஸ் வெளியிட்ட ஆடியோவால் தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.முக. கட்சியின் மூத்த தலைவராக பொன்னையன் இருக்கிறார். இவர் கன்னியாகுமரியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் நாஞ்சில் கோலப்பன் என்பவருடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். இது தொடர்பான ஆடியோவை ஓ.பி.எஸ் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோவில் கட்சி தலைவர்கள் எல்லாம் பணத்தின் பக்கம் நிற்பதாகவும், தொண்டர்கள் எல்லோரும் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார். அவரவர் பணத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக டெல்லியில் பிடித்து தொங்குகின்றனர்.
அதன்பிறகு தங்கமணி அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலினிடம் ஓடுகிறார் என்றும், கே.பி முனுசாமி முதல்வர் ஸ்டாலினை விமர்சிப்பதை நிறுத்திவிட்டார் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து கட்சிக்குள் குரூப் ஜாதி பிரச்சனை நிகழ்கிறது என்றும், எஸ்.பி வேலுமணி மற்றும் தங்கமணி கையில் பல எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர் எனவும், அதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வழியே கிடையாது எனவும், கே.பி முனுசாமி கூட ஒற்றை தலைமையாக வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
இந்த ஆடியோ வெளியாகி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பொன்னையன் தான் அவ்வாறு பேசவில்லை எனவும், என்னை போல் மிமிக்ரி செய்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில் ஓ.பி.எஸ் தன்னுடைய வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது எனவும் கட்சியின் கழகச் செயலாளர், துணை பொதுச்செயலாளர் மற்றும் பிற நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டது கட்சி விதிமுறைகளுக்கு எதிரானது எனவும் கூறியுள்ளார். மேலும் பொன்னையன் ஆடியோ போன்று அ,தி,மு.கவை சேர்ந்த பலரின் ஆடியோக்கள் கூடிய விரைவில் வெளியே வரும் என்று கூறியுள்ளார்.