தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு கோடி தடுப்பூசிகள் வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது தடுப்பூசி போடப்படும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3.59 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 44 சதவீதமும், இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டவர்கள் 15 சதவீதம் பேரும் உள்ளனர். இந்த சூழலில் வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி ஒரே நாளில் 10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 20 லட்சம் தடுப்பூசி போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். இதனால் ஒரு கோடி தடுப்பூசி வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு, மா சுப்பிரமணியன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.