தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை தர சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் வசூலிக்க படுவதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.