கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் பகுதியில் தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை, கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் அலுவலகம், பள்ளி, கல்லூரி மற்றும் வங்கிகள் போன்றவை அமைந்துள்ளது. இதனால் உப்பட்டி, தொண்டியாளம், பொன்னானி, குந்தலாடி, முக்கட்டி, கரியசோலை போன்ற பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் செல்கின்றனர். இது தவிர கேரளாவிற்கு செல்வதற்கும் பந்தலூர் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும்.
இதன் காரணமாக பந்தலூர் பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். ஆனால் போதிய அளவு பேருந்து வசதி இல்லாததால் மக்கள் நீண்ட நேரமாக பேருந்துக்கு காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதல் பேருந்துகளை இயக்குமாறு போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.