Categories
தேசிய செய்திகள்

கூடுதல் வரதட்சணை கேட்டு…. போலீஸ்காரர் மனைவிக்கு செய்த கொடுமை… கோர்ட்டு வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!!

கர்நாடகாவில் மனைவியை கிணற்றில் தள்ளி கொன்ற வழக்கில் போலீஸ்காரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சாம்ராஜ்நகர் தாலுகா நாகவல்லி கிராமத்தை சேர்ந்த போலீசான வெங்கடேஷ் என்பவருக்கும், கொள்ளேகால் தாலுகா தனகேரே கிராமத்தைச் சேர்ந்த திவ்யா என்பவருக்கும், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தின் போது திவ்யா குடும்பத்தினர் ரூபாய் 2 லட்சத்தை வெங்கடேஷுக்கு வரதட்சணையாக அளித்துள்ளனர் . இந்நிலையில் வெங்கடேஷ் இந்த வரதட்சணை தனக்கு போதாது என்றும் மேலும் பணம் வேண்டும் என்றும் கேட்டு மனைவி திவ்யாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். மேலும் கூடுதல் வரதட்சணை வாங்கி தர திவ்யா மறுத்ததால் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி திவ்யாவை கிணற்றில் தள்ளி வெங்கடேஷ் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராம்நாத் நகர் போலீசார் வெங்கடேஷை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு சாம்ராஜ்நகர் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி லோக் கப்பா வெங்கடேஷ் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்க பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 45 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Categories

Tech |