மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரி உரக்கடைகளில் விற்பனை செய்யப்படும் முறைகள் குறித்து திடீர் ஆய்வு நடத்தியுள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் அழகு நாகேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உரக்கடைகளில் அனுமதி இல்லாத உரங்கள் விற்கப்படுகின்றதா எனவும், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யபடுகின்றதா எனவும் ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து அதிக விலைக்கு உரங்கள் விற்கப்படுவது தெரிந்தால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த ஆய்வின் போது கம்பம் வட்டார வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உரம் தரக்கட்டுப்பாடு அலுவலர்கள் உடனிருந்துள்ளனர்.