Categories
அரசியல் மாநில செய்திகள்

கூடுவாஞ்சேரி-மீஞ்சூர் முதல்கட்ட வெளிவட்ட சாலை…. ரூ.1600.40 கோடி நஷ்டம்…. அமைச்சர் ஏ.வ வேலு…!!!

சட்டப்பேரவையில் இன்று பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ .வ வேலு திமுக ஆட்சியில் இருந்தபோது சென்னையை ஒட்டியுள்ள கூடுவாஞ்சேரி-மீஞ்சூர் முதல்கட்ட வெளிவட்ட சாலை தொடங்கப்பட்டது. அது ஜிஎம்ஆர் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டு பணிகள்  முடிவடைந்தது. அப்போது திமுக ஆட்சி காலத்தில்அந்த நிறுவனத்துடன் ஆறு மாதத்திற்கு 63.13 கோடி செலவிடப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டாம் கட்ட வெளிவட்ட சாலை பணிகள் நடைபெற்றது.

அதில் ஒப்பந்ததாரருக்கு 119.7 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் இதன்மூலம் தமிழக அரசுக்கு இரண்டாம்கட்ட வெளிவட்ட சாலை அமைப்பதில் 1886.40 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆறு வருடங்களில் விலைவாசி ஏறி விட்டது என்றாலும் அரசுக்கு 1600.40 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |