கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதாக நடிகரும்,சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தினார். குழந்தைகளுக்கு பாலியல் கல்வி போதிக்க வேண்டும் எனக்கூறி அவர் பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும்,உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயார் என கூறிய சரத்குமார்,கூட்டணி கட்சிகள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.