பாஜகவை கண்டு திமுக பணியவில்லை, நிமிர்ந்து தான் நிற்கின்றோம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழகம் வரக் கூடிய பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு இருக்குமா ? என்ற செய்தியாளர்களின் கேள்வி குறித்து பதிலளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாங்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறோம், அந்தக் கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணி, மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி, அந்தக் கூட்டணி தான் முடிவெடுக்க வேண்டும். அதுமாதிரி ஏதாவது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றால் அந்த கூட்டணியில் தான் முடிவெடுக்க முடியும். நான் சொல்லிட்டேன் நான் வந்து தனிக்கட்சியாக நடத்தும் போது நான் எங்கள் கருத்தை சொன்னேன்.
பிரதமர் வரும்போதெல்லாம் கறுப்புக்கொடி காட்டினோம். இப்பொழுது நாங்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணி தான் முடிவெடுக்க வேண்டும் இதை பற்றி….. இந்த அரசு பாஜகவுக்கு பணிந்து போகவில்லை, நிமிர்ந்து நிற்கின்றது, சாதனை மேல் சாதனை செய்து பாராட்டுக்கு மேல் பாராட்டு கிடைத்துக் கொண்டு இருக்கின்ற பொழுது மத்திய அரசு வேறு வழியே இல்லாமல் அவர்களே வந்து தமிழ்நாடு அரசு பாராட்டுக் கூடிய நிலைமையில் இருக்கிறார்கள். ஆகையினால் தமிழ்நாடு அரசை மத்தியில் இருக்கக்கூடிய அரசு மதிக்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் உடைய அரசியலில் மத்திய அரசின் ஊரக வஞ்சகமான போக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குஜராத் மீனவர்களுக்கு… ஒரு மீனவர்களுக்கு ஆபத்து என்றாலும் மோடி அரசு துடிக்கிறது, உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது. இங்கே தமிழக மீனவர்கள் இவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்ட பொழுதும் அதை கண்டிக்கவும் இல்லை, அதில் கண்டனம் தெரிவிக்கவும் இல்லை.பிஜேபிக்கு எதிரான ஒரு வலுவான சக்தியாக திரளவேண்டும் என்று என்னுடைய கருத்து. அப்பொழுதான் பிஜேபியை எதிர்த்து முறியடிக்க முடியும் என தெரிவித்தார்.