Categories
மாநில செய்திகள்

கூட்டணியில் தான் இருக்கோம்!…. ஆனால் அதெல்லாம் முடியாது!…. பா.ஜ.க தலைவர் ஓபன் டாக்…..!!!!

அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் அ.தி.மு.க-வை சேர்ந்த மூத்தநிர்வாகி செங்கோட்டையன் தனித்து போட்டி என்ற கருத்தையும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் இக்கருத்து பா.ஜ.க-வினர் இடையில் சலசலப்பை ஏற்படுத்தியது.  இச்சூழலில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக அறிவித்தார்.

இதனிடையில் உள் துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது அவரை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்காமல் தவிர்த்ததாகவும், மாறாக ஓ.பன்னீர்செல்வம் மட்டும் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாகவும் சர்ச்சை எழுந்தது. அமித்ஷா வரும்போது எல்லாம் சந்திக்கவேண்டிய அவசியமில்லை என எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக தெரிவித்திருந்தார். இது பா.ஜ.க வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கூட்டணியில் உள்ளோம் என்பதற்காக அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டியது இல்லை. பா.ஜ.க-வின் வளர்ச்சி என்பது அடுத்தக் கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |