நெளிவு, சுளிவாக செல்வது அடிமைத்தனம் அல்ல, அது ராஜதந்திரம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தொல். திருமாவளவன், நாம் பேசும் பேச்சு, நாம் எழுதும் எழுத்து, நம்முடைய களத்தில் ஆற்றும் செயல், நாம் நடத்தும் போர், போராட்டங்கள் ரொம்ப நுட்பமாக கவனித்திருக்கிறார், காதலித்திருக்கிறார். அருவாள் அல்ல போர்க்கருவி, கொடுவாள் அல்ல போர்க்கருவி, ஈட்டி அல்ல போர்க்கருவி, அறமே போர்க்கருவி.
அடிமைப்பட்டு கிடப்பவர்கள் அடிமைத்தனத்திலே கிடைக்க முடியாது. அவர்கள் வெகுண்டு எழுவார்கள், வீறுகொண்டு எழுவார்கள், விடுதலை பெறுவார்கள். அரசியல் மொழியில் சொல்கிறோம் திருப்பி அடி என்று… ஒடுக்குகின்றவரிகளின் கை இன்னும் வலிமையாக இருப்பதால் அந்த திருப்பி அடித்தல் என்பது வெளிச்சத்திற்கு வராமல் இருக்கிறது.
நம்ம ஆளுங்க வந்து எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனே கணக்கு வழக்கைதீர்க்கணும்னு நினைப்பான். டமால் டிமால் என்று போலீசே இருந்தாலும் சண்டை போடுவான், சாதிக்காரர்களாக இருந்தாலும் சண்டை போடுவான், அரசியல்வாதிகள் என்றால் உடனே அவர்களை விட்டு வெளியே வர வேண்டும்.
வா உடனே வெளியே வா… கூட்டணியே வேண்டாம். எதுக்கு 6 சீட்டுக்கு எல்லாம் கையெழுத்து போட்ட, தன்மானத்தோடு நாம் 234 நிற்போம், டெபாசிட் இழப்போம் என சொல்வான். நெளிவு, சுளிவாக செய்வது அடிமைத்தனம் அல்ல. , அது யுக்தி. தந்திரங்களிளே இராஜதந்திரம். நாயே என்று சொன்னவர்கள் எல்லாம் சிறுத்தை என்று அழைக்கக் கூடிய நிலை மாறி இருக்கிறது என திருமாவளவன் பேசினார்.