தமிழகத்தில் திமுக-பாமக கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்பி. வேலுமணி ஆகியோர் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது வன்னியர் இடப்பங்கீடு குறித்து மட்டுமே பேசப்பட்டது எனவும், வன்னியர் இடப்பங்கீடு தொடர்பாக கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை திமுக மற்றும் பாமக கூட்டணி குறித்த பேச்சுக்கே இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.