இரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் விதமாக நடைமேடைக் கட்டணத்தினை ரூபாய்.10 லிருருந்து 50 ரூபாயாக உயர்த்தி மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகமானது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மும்பை மண்டலத்திலுள்ள அனைத்து இரயில் நிலையங்களிலும் நடைமேடைக் கட்டணம் ரூபாய்.10ல் இருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த கட்டண உயர்வு அக்டோபர் 31ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய மும்பை, தாதர், போரிவாலி, பாந்த்ரா ஜங்ஷன், வாபி, வால்சத், உத்னா மற்றும் சூரத் ரயில் நிலையங்களில் நடைமேடைக் கட்டணமானது உயர்ந்திருப்பதால், பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். நடைமேடைகளில் அதிகக்கூட்டம் நிரம்பி வழிவதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், பயணிகள் உரிய நேரத்தில் ரயிலை பிடிக்கவும் இது வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.