Categories
சென்னை சேலம் திருச்சி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கூட்டம் கூட்டமாக குவிந்த குடிமகன்கள்….! கோடிகளை அள்ளிய மதுக்கடை …!!

இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழக முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரிப்பு.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை தோறும் எவ்வித தளர்வின்றி பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முழு முடக்கம் கடைப்பிடிக்கப்படுவதால் அத்தியாவசிய கடைகளைத் தவிர எந்த ஒரு கடைகள் இயங்காது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மதுப் பிரியர்கள் கூட்டம் கூட்டமாக மதுக்கடை முன்பு குவிந்தனர். தாங்கள் விரும்பிய மதுக்களை ஆயிரக் கணக்கான பணம் கொடுத்து வாங்கி சென்றனர். இதனால் நேற்று மது விற்பனை அதிகரித்தது, அதன் விவரம் இன்று வெளியாகியுள்ளது.

தமிழக முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ 177.17 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. மண்டலவாரியாக பார்த்தோமானால் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ 40.75 கோடி, திருச்சி ரூபாய் 40. 39 கோடி,  சேலம் ரூ 39.40 கோடி, கோவை _ ரூ 35.9 கோடி,சென்னை _ ரூ 20 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது. மேலும் கடந்த 4ஆம் தேதி சனிக்கிழமை ரூ 171 கோடிக்கும், கடந்த 11 ஆம் தேதி சனிக்கிழமை 178 கோடிக்கும், கடந்த 18ஆம் தேதி சனிக்கிழமை அன்று 183 கோடிக்கும் மதுவிற்பனை ஆனது. நேற்று சனிக்கிழமை அன்று 177 கோடி ரூபாயாக மது விற்பனையாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |