Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுத்துறை காலிப்பணியிடம்… அரசாணை வீடு தேடி வரும்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னி மாந்துறை ஊராட்சியில் பெரிய பொன்னி மாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காக 20 வருடங்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த சங்கம் செயல்பட 100 குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு சுமார் 55.00 லட்சம் அளவில் கடன் உதவிகள் வழங்கப்படுகிறது.

மேலும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள பலக்கனூத்து சங்கம், சூள்ளெரும்பு சங்கம், குட்டத்து ஆவரம்பட்டி சங்கம், முத்தனம் பட்டி சங்கம் மற்றும் புதுக்கோட்டை சங்கங்களை சேர்ந்த 20 சுய உதவி குழுக்களுக்கு சுமார் 72.65 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் இன்றைய தினத்தில் பயிர் கடன் கால்நடை பராமரிப்பு கடன் மகளிர் சுய உதவி குழு கடன் என 1.25 லட்சம் பயனாளிகளுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் அப்போது நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ பெரியசாமி பேசிய போது கூட்டுறவு துறை சார்பில் நிரப்பப்பட்ட 6000 பணியிடங்களை லஞ்சம், மதம், ஜாதி, வார்டுகள் இடையூறு என்று நேர்மையான முறையில் அரசு ஆணை அவர்கள் வீடு தேடி வரும் என நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியுள்ளார்.

Categories

Tech |