Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் மக்கள் அனைவருக்கும் இலவசமாகவும் அழிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் ரேஷன் கடை ஊழியர்கள் அரசு வழங்கும் சிறப்பு திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்கு வழங்கும் போது கூடுதல் நேரம் பணியாற்றுவது போன்ற முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்கள். இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் சில மாதங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய நிலையில் அவர்களின் கோரிக்கையை அரசு ஆலோசிப்பதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, மத்திய அமைச்சர்கள் தமிழக ரேஷன் கடைகளை ஆய்வு செய்த போது நாட்டிலேயே தமிழகத்தில் தான் ரேசன் கடைகள் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்து வருவதாக கூறினர். அரசு நிதியை எதிர்பார்க்காமல் கூட்டுறவு துறையில் வரும் லாபத்தில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். கோவையில் நடைபெறும் கூட்டுறவு சங்க கூட்டத்தில் ஓய்வூதியம் குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |