தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக வங்கிகளில் மக்கள் வட்டி செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. கடன் பெற்று திரும்ப செலுத்தாத ஆசிரியர்கள்,அலுவலர்களின் மாத ஊதியத்திலிருந்து அவர்களின் கடன் தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டும். கடன் பெற்ற விவரத்தை மறைத்து முழு ஊதியம் பெற வழிவகை செய்த சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.