Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு”… குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார்… பணியிடை நீக்கம் செய்து உத்தரவு…!!!!!!

சமீப காலமாக பல்வேறு துறைகளில் பண மோசடிகள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெண் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் செல்லப்பா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டுள்ளார். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய போது தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் குறுவை தொகுப்பை குமரி மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேச்சிபாளையம் தேனி ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். மேலும் வீரனாராயண சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன் வழங்குவதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட பெண் அதிகாரி அம்பிகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு பதிலளித்து கலெக்டர் அரவிந்த் பேசும்போது தமிழக டெல்டா மாவட்டங்களில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த நெல் குறுவை தொகுப்பு திட்டமானது நடைபாண்டில் டெல்டா அல்லாத சில மாவட்டங்களுக்கும் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் குமரி மாவட்டத்திற்கு விரிவு படுத்தும்போது வேளாண் இடுப்பொருட்கள் 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படும் பேச்சுப் பாறையில் தேனி மகத்துவம் மையம் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேனி ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான திட்டம் இல்லை எனவும் கூறியுள்ளார். குமரி மாவட்டத்தில் தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

வீரநாராயணசேரி தொடக்க வேளாண்மை சங்கத்தில் கடன் விளங்கியது தொடர்பாக பெண் அதிகாரி மீது பல்வேறு புகார்கள் வந்திருப்பதால் அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கனிம வளங்கள் கடத்துபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பி எம் கிசான் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறும் விவசாயிகள் தற்போது மீண்டும் அந்தத் திட்டத்தை தொடர புதுப்பிக்க வேண்டும் திருவிதாங்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அமராவதி குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கு கழிவுநீர் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக நில அளவீடு பணிகள் வருகிற 29ஆம் தேதி நடைபெறும் கோதை ஆறு பாசன கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |