நகர கூட்டுறவு வங்கிகளில் கடன் செலுத்தாதவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்படி மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டில் 5 லட்சம் பேருக்கு 4600 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சிலர் பல மாதங்களாக வட்டி மற்றும் அசல் கட்டாமல் உள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மூன்று மாதங்களுக்கு மேல் வட்டி மற்றும் அசல் கட்டாதவர்கள் உடனே தொகையை கட்டும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நகர கூட்டுறவு வங்கிகள், பொது மக்களிடம் இருந்து திரட்டப்படும் டிபாசிட் தொகையில் இருந்து கடன் வழங்குகிறது. கடன் பெற்ற சிலர் பல மாதங்களாக வட்டி, அசல் செலுத்தாமல் உள்ளனர்.எனவே மூன்று மாதங்களுக்கு மேல் வட்டி அசல் செலுத்தாமல் உள்ளவர்களை தொடர்பு கொண்டு உடனே செலுத்த அறிவுறுத்துமாறும் அலட்சியம் காட்டுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்குமாறும் மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.