Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நகை கடன் பெறுவதற்கு தகுதியானவர் மற்றும் தகுதியற்றவர் பட்டியலும் வெளியானது.

அதில் பாதிக்கு மேற்பட்டோர் நகை கடன் பெறுவதற்கு தகுதியற்றவர் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த முடிவுக்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது 5 பவுன் நகையை கூட்டுறவு வங்கியில் அடமானம் வைத்திருந்தால் கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள்.

ஆனால் 45 லட்சம் பேர் வங்கியில் 5 பவுன் நகையை அடகு வைத்துள்ளனர். அதில் நகை கடன் தள்ளுபடிக்கு 13 லட்சம் பேர்தான் தகுதியானவர்கள் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏராளமானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Categories

Tech |