தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக பெறப்பட்ட நகைக்கடனை தள்ளுபடி செய்துள்ளார்.
தமிழக அரசானது பொது மக்களின் நலனுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் நகைகடனுக்காக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
அவ்வாறு போலி நகைகளை வைத்து கடன் வாங்குதல் மற்றும் ஒரே நபர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிகளில் கடன் வாங்குதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதை கருத்தில் கொண்டு தகுதியான நபர்களை மட்டும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நகை கடனுக்காக விண்ணப்பித்தவர்களில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே கடனானது தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் மற்றும் நகைகள் பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஊழியா் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டமானது நேற்று முன்தினம் நடைபெற்ற்றுள்ளது. இதில் மாவட்டச் செயலாளர் மு.சாதிக் அலி கலந்து கொண்டு தெரிவித்துள்ளதாவது, விவசாயக் கடன், நகைக்கடன் தள்ளுபடிக்கான தொகையை கூட்டுறவு நிறுவனங்களுக்கு ஒரே தவணையில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். மேலும் மார்ச் 28, 29ம் தேதிகளில் கூட்டுறவு சங்கம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில், கூட்டுறவு சங்க ஊழியர்கள் கலந்து கொள்ள போவதாக திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.